Thursday 3 July 2014

ஜப்பான், சீனாவிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்:அமர்த்தியா சென்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2014
16:08
லண்டன்: பொருளாதார வளர்ச்சி குறித்த விஷயத்தில், ஆசிய நாடுகளான ஜப்பான் மற்றும் சீனாவிடம் இருந்து இந்தியா ஏராளமான பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் கூறி உள்ளார்.
லோக்சபா தேர்தலின் போது, மோடி பிரதமராவதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த அமர்த்தியா சென், தேர்தலுக்கு பின், தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளார். ஜனநாயகத்தின் அடிப்படையில் மோடி பிரதமராக ஆட்சி புரிவதற்கு எல்லா உரிமைகளும் அவருக்கு உண்டு என்று அவர் கூறி உள்ளார். லண்டன், ஏசியா ஹவுசில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அமர்த்தியா சென், 'இந்தியாவில், ஒரு துடிப்புமிக்க புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, மாற்றங்கள் உண்மையிலேயே வியக்க வைக்கின்றன. கட்டமைப்பு, சாலை மேம்பாடு ஆகியவை அங்கு சிறப்பாக உள்ளன. அதேவேளையில், மத்தியில், சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்த வேண்டும்,' என்றார்.
மேலும், ஊழல் ஒழிப்பில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள அமர்த்தியாசென், 'மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும், அது இப்போதைய தேவைக்கு போதாது என்ற நிலையிலேயே உள்ளது,' என்றார்.
மதச்சார்பின்மை குறித்து குறிப்பிட்ட அமர்த்தியா சென், 'மோடி அரசு பெரும்பான்மை பெற்றுள்ளது என்றாலும், சிறுபான்மையினரின் நலனையும் அது கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மதச்சார்பின்மை கொண்டது. இங்கு வாழும் ஒவ்வொரு மக்களும் தங்கள் கருத்துக்களை சொல்ல முழு உரிமை உள்ளது, பொருளாதார வளர்ச்சி குறித்த விஷயத்தில், ஆசிய நாடுகளான ஜப்பான் மற்றும் சீனாவிடம் இருந்து இந்தியா ஏராளமான பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்' என்றார்.thanksdinamalar.

No comments:

Post a Comment